அமைதியின்மை வரைபடங்கள்


பாபு ஈஸ்வர் பிரசாத்

Babu Eshwar Prasad
Babu Eshwar Prasad

பாபு ஈஸ்வர் பிரசாத் பெங்களூரில் உள்ள கர்நாடக சித்ரகலா பரிஷத்திலிருந்து பி.எஃப்.ஏ (ஓவியம்) படித்துவிட்டு, குஜராத் மாநில பரோடாவின் எம்.எஸ். யுனிவர்சிட்டியிலிருந்து எம்.எஃப்.ஏ (கிராபிக்ஸ்) பட்டத்தை பெற்றார். .

அவர் தனது முதலாவது கண்காட்சியான தி மிட்நைட் சன் [நள்ளிரவு சூரியன்] 1996 இல் பெங்களூரின் சாக்ஷி [கலைக்கூடம்] கேலரியில் நடத்தினார்,

பின்னர் கர்நாடக சித்ரகலா பரிஷத், பெங்களூர், 1999 ஆண்டில் தனது சோலோ ஷோ 'ஸ்டில் லைவ்ஸ் ஆப் எம்ப்டினெஸ் [வாழ்க்கையின் வெறுமையின் சித்திரங்கள்], ஸ்மைல்ஸ் அண்ட் ஷேடோஸ் [புன்னகையம், நிழல்களும்], சாக்ஷி கேலரி, பெங்களூர் / பம்பாய், 2002 மற்றும் 'டைம் பாஸ்ட், டைம் டு கம்' [கடந்த, கலைம், வரப்போகும் கலைம்] மும்பையில் போதி கலைக்கூடத்தில் 2007 ஆண்டிலும்,”ஸ்கின் ஆஃப் தி எர்த்” [பூமியின் தோல்] சுமுகா கேலரியில், 2013 நடைபெற்றது.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்ல பல கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஓவியம் தவிர, சிற்பம், ஒலி, வீடியோ மற்றும் புகைப்படக் கலை போன்ற பிற ஊடகங்களை ஆராய்வதில் பிரசாத் ஆழ்ந்த ஆர்வம் காட்டியுள்ளார். அவரது குறுகிய வீடியோக்கள் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டுள்ளன.

பிரசாத் தனது முதல் திரைப்படமான காலிபீஜா (காற்றின் விதை) 2015ல் உருவாக்கினார். இந்த சுயநிதி கன்னட படம், ஜியோ மாமி, மும்பை திரைப்பட விழா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, 3 வது சான் பிரான்சிஸ்கோ சர்வதேச தென்னாசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது; 18 வது பிலிம் கொலம்பியா. என்ஜிஎம்ஏ பெங்களூரு, 2016 குன்ஸ்டாம்முலங் (கே 21, அருங்காட்சியகம்) ட்யுசெல்டார்ஃப், 2018. தற்போது இந்த ஆண்டு இறுதியில் வெளிவரும் தனது இரண்டாவது திரைப்படத்தை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பாபு ஈஸ்வர் தற்போது பெங்களூரு மற்றும் புதுதில்லியில் வசித்து வருகிறார்.

  • வீடியோ 'பாஸ்ட் பார்வார்ட் டு ஜீரோ' விலிருந்து ஸ்டில்ஸ்