அமைதியின்மை வரைபடங்கள்


மோஹினி சந்திரா

Portrait of Mohini Chandra

மோஹினி சந்திராவின் புகைப்படங்கள் தனி மனிதர்களின் அடையாளம் மற்றும் உலகமயமாக்கப்பட்ட இடங்களின் வெளிப்பாடுகள் மற்றும் நாட்டை விட்டு வேறு நாடு குடி செல்லும் மக்களின் நினைவகமாக பணி புரிகின்றன. ஒரு குழந்தையாக சந்திரா பிஜியில் வசித்தார்; இந்திய-பிஜிய புலம்பெயர்ந்தோர்களுடன் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.

புகைப்பட வரலாறுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளிநாட்டு உடமைகள், மானுடவியல் மற்றும் இனவியல் கேள்விகள் மற்றும் தற்கால உலகமயமாக்கப்பட்ட பண்பாடுகளின் வரலாற்றில் காட்சி கலாச்சாரத்தின் செயல்முறைகளில் அவருக்கு ஈடுபாடு உள்ளது.

ராயல் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற சந்திரா பரவலாக கண்காட்சி நடத்தித்தியுள்ளார். இதில்: பாரடைஸ் நவ், தற்கால பசிபிக் கலை, ஆசியா சொசைட்டி மியூசியம், நியூயார்க்; அவுட் ஆஃப் இந்தியா, குயின்ஸ் மியூசியம் ஆஃப் ஆர்ட், நியூயார்க்; ஈஸ்ட் விங் கலக்ஷன்ஸ், கோர்டால்ட் நிறுவனம், லண்டன்; கிரவுன் ஜுவல்ஸ், நியூ கெசெல்சாஃப்ட் ஃபர் பில்டெண்டே குன்ஸ்ட் (என்ஜிபிகே) பெர்லின் & காம்ப்நாகல் ஆர்ட் கேலரி, ஹாம்பர்க்.

 மிக சமீபத்தில், புகைப்பட காட்மாண்டு (2015), மொழிகளின் குழப்பம்: கலை மற்றும் மொழியின் வரம்புகள், தி கோர்டால்ட் கேலரி, சோமர்செட் ஹவுஸ், லண்டன் (2016), மும்பையில் புகைப்பட விழா, (2017) மற்றும் ஹூஸ்டன் ஃபோட்டோஃபெஸ்ட் பியனாலே (2018) குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் ஆர்ட்ஸ் கவுன்சில் சேகரிப்பு உட்பட இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச சேகரிப்பில் அவரது புகைப்படங்கள் உள்ளன.மேலும் பேடனி'ஸ் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி (எட். டேவிட் கம்பெனி) போன்ற முக்கிய வெளியீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. 

பிஜியில் பணிபுரிவதற்காக ஆஸ்திரேலியா கவுன்சில் மானியம், ஆர்ட்ஸ் என்.எஸ்.டபிள்யூ நிதியளித்த இந்தியாவில் ஏசியாலிங்க் ரெசிடென்சி மற்றும் பாரிஸில் உள்ள ஆஸ்திரேலியா கவுன்சில் சைட் ரெசிடென்சி ஆகிய இரண்டையும் மோகினி சந்திரா சமீபத்தில் பெற்றார். இதற்கு முன் கலை மற்றும் மனிதநேய ஆராய்ச்சி கவுன்சில் பெல்லோஷிப், ஆர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இங்கிலாந்து தனிநபர் கலைஞர்களின் விருதுகள், பிரிட்டிஷ் கவுன்சிலின் பயண விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது கலைக்கு ஆட்டோகிராப் ஏபிபியும் துணைபுரிகிறது.

மோகினி சந்திராவின் விரிவான, தற்போதைய திட்டமான பாரடைஸ் லாஸ்டின் [தொலைந்த சொர்க்கம்] அடுத்த அத்தியாயம் பிளைமவுத்திலும், 2021 ஆம் ஆண்டில் வரவிருக்கும் சென்னை பியனாலேயில் காண்பிக்கப்படும். பாரடைஸ் லாஸ்ட் (2020) இங்கிலாந்து கலை கவுன்சில் லாட்டரி ஃபண்ட் மற்றும் பிளைமவுத் கலைக் கல்லூரியால் ஆதரிக்கப்படுகிறது. இது பிளைமவுத் தொல்பொருள் கப்பல்கள் திட்டத்தின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது 

மோகினி தற்போது இங்கிலாந்தின் டெவோன் நகரில் வசித்து வருகிறார்.

  • பாரடைஸ் லாஸ்ட் [தொலைந்த சொர்க்கம்] வேலை பாட்டிலிருந்து, 2020-2021